சென்னை: ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், துணைவேந்தர் நியமனத்திற்கான வேட்பாளரை அடையாளம் காண்பதற்காக குழுவை உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய யுஜிசி விதிகளின்படி பல்கலைக்கழகத்தின் வேந்தர், சிண்டிகேட், பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் யுஜிசி தலைவரின் நியமனத்துடன் அமைத்துள்ளார்.
இந்த தேடுதல் குழு மூலம் துணைவேந்தரை நியமிக்க ஆளுநர் தமிழக அரசுக்கு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இதயைடுத்து தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஜனவரி 9ம் தேதி மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க குழு அமைத்து அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. இதில் வேண்டுமென்றே யுஜிசி தலைவரின் பரிந்துரையாளரை விட்டுவிட்டு குழு அமைத்துள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறியதாகும். எனவே, யுஜிசி தலைவரின் நியமனம் அடங்கிய தேடல் குழுவால் அமைக்கப்பட்ட தேடல் குழுவிற்கு அறிவிக்கை அனுப்பியதை திரும்பப் பெறுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு ஆளுநர் வேண்டுகோள் appeared first on Dinakaran.