மதுரை: கள்ளழகர் கோவிலில் 14-ந் தேதி தெப்பத்திருவிழா

3 hours ago 1

மதுரை,

பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நிறை நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி மாதம் பவுர்ணமி நாளில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவானது வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.

13-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கஜேந்திர மோட்ச விழா நடைபெறுகிறது. 14-ந் தேதி காலை 7.31 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் இருப்பிடத்தை விட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளழகர் பெருமாள் தெப்பத்துக்கு புறப்படுகிறார். வழி நெடுகிலும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டு வரவேற்கிறார்கள். காலை 10.35 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் பொய்கை கரைப்பட்டி எனும் புஷ்கரணி தெப்பக்குளம் சென்று அங்கு கிழக்கு பக்கம் உள்ள மண்டபத்தில் கள்ளழகர் பெருமாள், தேவியருடன் எழுந்தருள்வார்.

அங்கு திரளான பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் அன்று மாலை சுவாமி வந்த வழியாகவே சென்று கோவிலுக்குள் இருப்பிடம் சேருகிறார். இந்த திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் யக்ஞ நாராயணன் மற்றும் அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Read Entire Article