மதுரை: கனமழையால் வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறக்கம்

2 months ago 15

மதுரை,

மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து 2 இண்டிகோ விமானங்கள் இன்று 9 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தன.

ஆனால், மதுரையில் கனமழை பெய்து வருவதால் 2 விமானங்களும் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக 2 விமானங்களும் வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்தன.

இந்நிலையில், கனமழையால் நடுவானில் வட்டமடித்துக்கொண்டிருந்த 2 இண்டிகோ விமானங்களும் 1 மணிநேரத்திற்கு பின் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.

Read Entire Article