மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்

1 month ago 5

புதுடெல்லி,

மதுரை மாவட்டம் தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜப்பான் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026 அக்டோபரில் நிறைவடையும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ன. எய்ம்ஸ் கட்டுமான திட்ட நடவடிக்கைகளுக்கான நிதியை வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read Entire Article