மதுரை அருகே கள்ளந்திரியில் சேதமடைந்த சாலை சீரமைப்பு

2 weeks ago 2

மதுரை, ஜன. 18: தினகரன் செய்தி எதிரொலியாக, மதுரையை அடுத்த கள்ளந்திரியில் இருந்து சிட்டம்பட்டி செல்லும் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரையை அடுத்த கள்ளந்திரியில் இருந்து சிட்டம்பட்டி செல்லும் சாலையில் நாள்தோறும் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. கள்ளந்திரியில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து பெரிய பள்ளத்துடன் இருந்தது.

இதனால் மழைக்காலங்களில் இந்த வழியாக செல்லும் டூவீலர்கள் நிலைதடுமாறி விழுந்ததுடன், அவற்றில் பயணித்தோர் காயமடைந்தனர்.  இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இதுகுறித்து சமீபத்தில் தினகரன் நாளிதழிலில் செய்தி வௌியானது. இதன் எதிரொலியாக சம்மந்தப்பட்ட இடத்தில் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் இருந்த பள்ளத்தை சீரமைத்தனர். ,இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மதுரை அருகே கள்ளந்திரியில் சேதமடைந்த சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article