மதுரை: ‘77 நாட்கள் மதுரை அரிட்டாபட்டி மக்களின் நிம்மதியை கெடுத்தது யார்?’ என்று மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அமைச்சர் அரிட்டாபட்டி மக்கள் இனி நிம்மதியாக உறங்குவார்கள் என்கிறார். 77 நாள்கள் அவர்களின் நிம்மதியைக் கெடுத்தது யார்? என கேட்கிறோம். நிம்மதியைக் கெடுத்ததே ஒன்றிய அரசுதான். நாங்கள் ஒரு அரிட்டாபட்டியை போராடிக் காத்திருக்கிறோம். நீங்கள் பல அரிட்டாபட்டிகளை உருவாக்குவோம் என குடியரசுத் தலைவர் உரையில் கூறுகிறீர்கள்.
நீங்கள் ராமாயண அனிமேஷன் படத்தை இந்த அவை உறுப்பினர்களுக்கு ஒளிபரப்புவதாகக் கூறுகிறீர்கள். நாங்கள் தமிழக அரசு உருவாக்கியுள்ள இரும்பின் காலம் குறித்த ஆவணப் படத்தை இந்த அவைக்கு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்த அரசு தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கிற, தமிழ்நாட்டின் தேவையை மறுக்கிற, தமிழ்நாட்டின் பெருமையை மறுக்கிற அரசாக இருக்கிறது. இதனை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மதுரை அரிட்டாபட்டி மக்களின் நிம்மதியை கெடுத்தது யார்?: மார்க்சிஸ்ட் எம்பி காட்டம் appeared first on Dinakaran.