மதுரை, அண்ணாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

3 months ago 20

 

மதுரை, அக். 4: மதுரை அண்ணாநகர் பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 40க்கும் அதிகமான கடைகளை மாநகராட்சியினர் அகற்றினர். மதுரையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள், பொதுமக்கள் சென்று வர வசதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி நேற்று மதுரை மாநகராட்சியின் 35வது வார்டில் அண்ணாநகர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாநகராட்சியினர் பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள், பணியாளர்களுடன் சென்று அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.

இதன்படி அண்ணாநகர் மெயின் ரோட்டில் சுகுணா ஸ்டோர், கோல்சா காம்ப்ளக்ஸ், யானை குழாய் பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதன்படி சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்திருந்த 40க்கும் அதிகமான கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால், அவை உடனடியாக அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

The post மதுரை, அண்ணாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article