மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதி விபத்து

2 hours ago 1

 

மதுராந்தகம், மார்ச் 1: மதுராந்தகம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின் தொடர்ந்து வந்த மினி லாரி மோதி நின்றது. அந்த மினி லாரியை பின் தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும் பின்னால் மோதியது. இதில் மினி லாரி இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கி பலத்த சேதம் அடைந்தது. இதனால், அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மினி லாரியில் இருந்த ஓட்டுநர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து காரணமாக 2 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனே மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article