சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்வு

3 hours ago 2

சென்னை: சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965 ஆக விற்பனை ஆகிறது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.5.50 உயர்ந்து ரூ.1965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 மாதங்களாக வணிக சிலிண்டரின் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. வணிக சிலிண்டர் கடந்த டிசம்பர் மாதம் ரூ.1980-க்கும், ஜனவரி மாதத்தில் ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலும் விலை குறைந்து ரூ.1,959-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு வணிக சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,965-ஆக அதிகரித்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50-ஆக நீடிக்கிறது.

The post சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article