
மாஸ்கோ,
ரஷியாவின் டகஸ்டன் மாகாணம் மக்சக்லா நகரில் உள்ள பரபரப்பான சாலையில் நேற்று மதியம் 2 மணியளவில் போக்குவரத்து போலீசார் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, சாலையில் வேகமாக வந்த காரை மறிக்க முற்பட்டனர். அந்த காரில் நிற்காமல் சென்றது. காரில் இருந்த 2 பேர், திடீரென போக்குவரத்து போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் போக்குவரத்து போலீசார் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு காரில் தப்பிச்சென்ற 2 பேரை சுட்டுக்கொன்றனர். மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.