மதுபோதையில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன் - போலீசிடம் கண்ணீருடன் விவரித்த மகள்.!

6 months ago 17
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மது போதையில் மகள் கண்முன்னே மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தான். வில்வனூரைச் சேர்ந்த சேட்டு - கௌரிப்பிரியா தம்பதி விவாகரத்துக்கு விண்ணப்பித்து, தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது மகனும் மகளும் கௌரிப்பிரியாவுடன் வசித்து வந்த நிலையில், நேற்று தீபாவளிக்காக புத்தாடைகள் வாங்கிக் கொண்டு மது போதையில் பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற சேட்டுவுக்கும் கௌரிப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, காய்கறி நறுக்கும் கத்தியால் கௌரிப்பிரியாவை சேட்டு குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தன் கண்முன்னே தாய் கொல்லப்பட்டதை 10 வயதான அவரது மகள் அழுதுகொண்டே போலீசிடம் விவரித்தது காண்போரை கலங்கச் செய்தது. 
Read Entire Article