
நாமக்கல்லில் ஒட்டமெத்தை பகுதியில், சங்ககிரியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், லாரியை மடக்கிப் பிடித்து மதுபோதையில் இருந்த ஓட்டுனர் முருகன், கிளீனர் பாபு ஆகிய இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த பள்ளிபாளையம் போலீசார், இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்றதோடு, லாரியையும் பறிமுதல் செய்தனர். மதுபோதையில், சரக்கு லாரியை மின்கம்பத்தில் மோதிய ஓட்டுனரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.