
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல். இவர் நேற்று இரவு மதுபோதையில் பத்வார் சவுக் பகுதியில் காரை ஓட்டி சென்றுள்ளார்.
மதுபோதையில் காரை வேகமாக ஓட்டிய ராகுல் , சாலையில் முன்னே சென்ற பைக்குகள், சைக்கிள்கள் மீது மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தினார். இதில், பைக்குக்ள், சைக்கிள்களில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த கோர சம்பவத்தில் பைக்கில் பயணித்த முகமது இஸ்மாயில் (வயது 75), சோட்டாலா ஹானி (வயது 35) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராகுலை அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும், அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், ராகுல் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.