மதுபான முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலிடம் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

4 weeks ago 5

புதுடெல்லி: டெல்லி அரசு அமல்படுத்திய 2021 -22 ம் ஆண்டு மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு ஆளுநர் சக்சேனா உத்தரவிட்ட நிலையில் சிபிஐ வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து அமலாக்கத்துறையும் சட்ட விரோத பணி பரிமாற்றம் தொடர்பாக விசாரணையை நடத்தியது. இதனை தொடர்ந்து மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்களை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் கைதான கெஜ்ரிவால், சிசோடியா இருவரும் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த ஆளுநரிடம் கடந்த மாதம் அனுமதி கோரியுள்ளது. இதற்கு ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post மதுபான முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலிடம் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article