மதுக்கரை தாலுகா அலுவலகம் முன்பு விசிக சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம்

2 months ago 6

 

மதுக்கரை, பிப்.25: மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், பட்டா கொடுக்காமல் மனுக்களை குப்பையில் போட்டுள்ளதாக கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று மதுக்கரை தாலுகா அலுவலகம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாநில துணை பொது செயலாளர் சுசி கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் ஸ்டீபன் சுந்தர், துணை செயலாளர் கிணத்துக்கடவு சுப்பிரமணியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முதலில் கூடியிருந்த பொதுமக்களுக்கு அல்வா கொடுத்த விசிகவினர், பின்னர் தாலுகா அலுவலகத்திற்குல் சென்று, வட்டாட்சியர் வேல்முருகனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் வேல்முருகன், தான் இப்போதுதான் இடம் மாறுதல் பெற்று, பொறுப்பேற்றுள்ளேன், உங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post மதுக்கரை தாலுகா அலுவலகம் முன்பு விசிக சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article