அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த 215 மி.மீ கனமழை: கோவை நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் 

3 hours ago 3

ஊட்டி / கோவை: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆபத்தான பகுதிகளில் யாரும் நடமாட வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் மாலை 4 மணிக்குள் தங்கும் விடுதிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மதியம் 1 மணிக்கு பைக்காரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டாவது மைல் என்ற இடத்தில் மரம் முறிந்து விழுந்ததில், கேரள மாநிலம் முகேரிவடகரையை சேர்ந்த பிரசித் என்பவரது மகன் ஆதிதேவ் (15) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அஞ்சலி செலுத்தினார்.

Read Entire Article