மதுக்கடையை மாற்றக்கோரி பெண்கள் போராட்டம்

3 months ago 11

மண்டபம்,பிப்.7:பனைக்குளம் அருகே மதுபான கடையை மாற்றக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் மற்றும் பனைக்குளம் சாலை சந்திப்பு நாடார்வலசை பகுதியில் மதுபான கடை இயங்கி வருகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக இருக்கிறது. இதனால் வேறு பகுதிக்கு மாற்றக்கோரி போராட்டம் நடத்தி புகார் மனு அளித்தனர்.

ஆனால் மதுகடையை மாற்றாததால், நேற்று அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பனைக்குளம்,அழகன்குளம் சாலையில், மதுபான கடையை அகற்ற கோரி விளம்பர பதாகையுடன் ஊர்வலமாக கோஷமிட்டு மதுகடை நோக்கி சென்றனர். அப்போது தேவிப்பட்டினம் போலீசார், தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

The post மதுக்கடையை மாற்றக்கோரி பெண்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article