மது விற்ற 3 பேர் கைது

4 weeks ago 6

ஈரோடு, டிச. 18: ஈரோடு வடக்கு போலீஸ் எஸ்ஐ கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வில்லரசம்பட்டி அருகே தொட்டம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்த சவுந்தரராஜன் (30), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியில் மது விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாண்டியராஜன் (31) என்பவரை ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல், நம்பியூர் பகுதியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ராஜா (40), என்பவரை கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article