மது போதையில் சிக்கியவருக்கு போக்குவரத்து எஸ்ஐ அறிவுரை

3 weeks ago 5

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த மல்ரோசாபுரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு அந்த வழியாக ஒருவர் வந்தார். அப்போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரின் ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது, அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி அபராதம் வசூலித்தபின், ‘‘மது போதையில் இருந்தவரிடம் நீங்க குடிக்கிறதால உங்களுக்கு மட்டும் கஷ்டம் கிடையாது, உங்கள் குடும்பத்திற்கும் கஷ்டம், நீங்கள் குடித்துவிட்டு ரோட்டுக்கு வந்தால் உங்களுக்கும் நஷ்டம், எதிரே வரவங்களுக்கும் நஷ்டம்.

மேலும், ரூ.100க்கு குடித்துவிட்டு தற்போது ரூ.1000 அபராதம் கட்டுறீங்க, இந்த பணத்தை குடிக்காமல் உங்கள் குடும்பத்திற்கு கொடுத்திருக்கலாமே, உங்களால் முடிந்தால் இந்த குடியை இதோட விடுங்க, நல்லா இருப்பீங்க’’ என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

The post மது போதையில் சிக்கியவருக்கு போக்குவரத்து எஸ்ஐ அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article