தம்மம்பட்டி, பிப்.7: தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி மண்மலை பாலகாடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(45). கெங்கவல்லி ஒன்றிய அதிமுக மணவரணி செயலாளரான இவர், தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், தம்மம்பட்டி எஸ்.ஐ. சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பரமசிவம் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், 750 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி, பரமசிவத்தை கைது செய்தனர். மேலும், தம்மம்பட்டி 8வது வார்டு காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த விஜி(41) என்பவரது வீட்டிலும், மது பதுக்கி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விஜியையும் போலீசார் கைது செய்தனர்.
The post மது பதுக்கி விற்ற அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.