பெரம்பூர்: சென்னை பெரம்பூர் மங்களபுரம் சந்திரயோகிசமாதி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் வேலை எதுவும் செய்யாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றிவருவதாக தெரிகிறது. இவரது நண்பர்கள் ஓட்டேரிகிருஷ்ணதாஸ் சாலை பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (26). இவர் ஏசி மெக்கானிக். ஓட்டேரி பழைய வாழைமாநகர் பகுதியை சேர்ந்தவர் ஐசக் ஜெபக்குமார் (23). இவர் ராயப்பேட்டையில்உள்ள தனியார் மாலில்வேலைசெய்து வருகிறார். இவர்கள் 3 பேரும் அடிக்கடி மது அருந்துவார்களாம்.
கடந்த சில நாட்களாக மணிகண்டன் மது குடிப்பதற்காக அடிக்கடி ஜெய்சங்கரிடம் பணம்கேட்டு தொல்லை கொடுத்துவந்துள்ளதாக தெரிகிறது. நேற்று மாலை ஜெய்சங்கரிடம் பணம் கேட்டபோது பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதன்பிறகு மணிகண்டன் குடிபோதையில் சந்திரயோகி சமாதி தெரு வழியாக வந்தபோது அங்கு நண்பர் ஜெய்சங்கரின் தந்தை ஆறுமுகம் வந்துள்ளார். அவரிடம் சென்று மணிகண்டன், ‘’உங்கள் மகன் பணம் கேட்டால் தர மாட்டேன் என்று கூறிவிட்டான். எனவே, அவனை கொலை செய்து விடுவேன்’ என்று எச்சரித்துள்ளார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த ஆறுமுகம் இதுபற்றி மகனிடம் தெரிவித்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த ஜெய்சங்கர் மற்றொரு நண்பர் ஐசக் ஜெபக்குமாருடன் சென்று இரும்பு ராடால் மணிகண்டன் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனால் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிட்டனர். இதையடுத்து மணிகண்டனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்து கட்டத்தில் உள்ள மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரித்து ஜெய்சங்கர், ஐசக் ஜெபக்குமார் ஆகியோரை இன்று காலை கைது செய்து கொலை முயற்சி வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
The post மது அருந்த பணம் கேட்ட விவகாரத்தில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்: நண்பர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.