'மதகஜராஜா' படத்தின் முதல் நாள் வசூல்

3 weeks ago 5

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் 'மதகஜராஜா'. இதில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இப்படம், நேற்று வெளியானது.

நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்தாண்டின் முதல் வெற்றிப்படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், 'மதகஜராஜா' தமிழகத்தில் மட்டும் முதல்நாள் வசூலாக ரூ. 3.10 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Darling love u. Fantastic response for our combo. Heroine combo vida namba combo dhaan kalakatudhu. https://t.co/DW5aEbsYd6

— Vishal (@VishalKOfficial) January 12, 2025
Read Entire Article