சென்னை: “அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலரும் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலரும் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலையில் நீண்ட நெடுங்காலமாக இந்துக்கள், இஸ்லாமியர்கள், ஜெயின் மதத்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் மதநல்லிணக்கத்தோடு, சகோதர, சகோதரிகளாக தங்கள் வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.