'மத யானைக் கூட்டம்' இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

1 month ago 11

மதுரை,

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரம் சுகுமாரன். 'ஆடுகளம்' படத்தில் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார். ஆடுகளம் வெற்றிக்கு விக்ரம் சுகுமாரன் பெரிய காரணம் என பல பேட்டிகளில் வெற்றிமாறன் கூறியிருப்பார்.

அதனை தொடர்ந்து, 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் சாந்தனுவை வைத்து 'ராவணக்கோட்டம்' என்ற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில், நேற்று மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article