மண்ணின் நீர் பிடிப்பு திறனை அதிகரிக்க மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள்

1 week ago 3

*வேளாண்மை உதவி இயக்குனர் அறிவிப்பு

சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையம், கொம்மனந்தல், வடமாதிமகலம் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில், முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதைகள் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தக்கைப்பூண்டு விதையை ஒரு ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைப்பு செய்து 45வது நாள் பூப்பூக்கும் தருணத்திற்கு முன்பாக மடக்கி உழவு செய்வது மூலம் அடுத்த பருவத்தில் பயிர் செய்யும் பயிருக்கு மண்ணில் தழைச்சத்து அதிகப்படுத்தி ஊரச் செலவை குறைக்கலாம்.

மேலும் தக்கைபூண்டு விதையை பசுந்தால் உரமாக பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள கரிமச்சத்து அதிகரிக்கப்படுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும், மண்ணின் நீர் பிடிப்பு திறனும் அதிகரிக்கிறது.

எனவே விதை தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி மானிய விண்ணப்பம் பெற்று தக்கைப்பூண்டு விதையை வாங்கி பயனடைய வேண்டும் என்று சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி தெரிவித்தார்.

The post மண்ணின் நீர் பிடிப்பு திறனை அதிகரிக்க மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள் appeared first on Dinakaran.

Read Entire Article