மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

1 week ago 6

நெல்லை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியை பார்வையிடுவதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் மிதமான மழை பெய்தது. தூத்துக்குடியில் காலையில் மேகமூட்டமாக இருந்தது. பின்னர் சாரல் மழை பெய்தது.

Read Entire Article