மணிப்பூர்: ராஜ்பவன் அருகே கையெறி குண்டு கண்டெடுப்பு

2 months ago 15

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலுள்ள ஜி.பி. மகளிர் கல்லூரியின் வாசலில் இன்று காலை கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கல்லூரி மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், முதல்-மந்திரியின் அரசு இல்லத்திலிருந்தும், மணிப்பூர் காவல்துறை தலைமையகத்திலிருந்தும் 300 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கையெறி குண்டு குறித்து தகவல் கிடைத்தவுடன், அந்ப் பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்பால் பகுதியில் உள்ள பல கல்வி நிறுவனங்களை தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article