மணிப்பூரில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய குகி ஆயுதக்குழுவினர்

3 months ago 21

இம்பால்,

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே வன்முறை, மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சில மாதங்களாக மணிப்பூரில் அமைதி காணப்பட்டது.

இந்த சூழலில், சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இன்றைய தினம் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டதில் உள்ள பொடோபெக்ரா காவல் நிலையத்தின் மீது குகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக குகி ஆயுதக்குழுவினர் மீது காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read Entire Article