மணிப்பூரில் 6 பயங்கரவாதிகள் கைது

1 week ago 2

இம்பால்,

மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்தது. 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த மோதல் காரணமாக அங்கு பொது அமைதி பாதிப்படைந்தது. வன்முறையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தநிலையில் அந்த மாநில முதல்-மந்திரி பைரன் சிங் பதவி விலகினார்.

தொடர்ந்து அங்கு சட்டப்பிரிவு 356-ன்படி ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் மேற்கு மற்றும் கிழக்கு இம்பாலில் பயங்கரவாதிகள் சிலர் முகாமிட்டு அரசுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடுவதாக ராணுவத்தினருக்கு துப்பு கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்று பெண் பயங்கரவாதி உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நவீன துப்பாக்கிகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

Read Entire Article