
இம்பால்,
மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இன மக்களிடையே வன்முறை ஏற்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இருபிரிவினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனா். வன்முறையை சமாளிக்க முடியாததால் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பைரன் சிங் பதவி விலகினார். இதனால் அங்கு சட்டபிரிவு 56-ன்படி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் நம்போல் பஜாரில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருந்து சமூக விரோத செயல்களுக்கு சதி தீட்டி வருவதாக ராணுவ வீரர்களுக்கு துப்பு கிடைத்தது. இதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர். அதில் ஒருவன் 18 வயது நிரம்பாதவன். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.