ஈரோடு: ‘சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி - பாக்கியம் ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த 29-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, பாஜக சார்பில் சிவகிரியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நாமக்கல் குப்பிச்சிபாளை யம், சென்னிமலை முருங்க தொழுவு, பல்லடம் கள்ளக் கிணறு, சோமலைகவுண்டன் பாளையம் என பல்வேறு இடங்களில் விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.