மணல் திருட்டை காட்டி கொடுப்பதாக வாலிபருக்கு கொலை மிரட்டல்: எஸ்பியிடம் மனைவி புகார்

3 weeks ago 5

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பாரதிதாசனார் தெருவைச் சேர்ந்தவர் ஏஞ்சல் (28). இவரது கணவர் வினோத்குமார். இவர் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த மணல் மாபியா மணி, விக்கி மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் மணல் கொள்ளை தொடர்பான விசாரணைக்கு வினோத்குமாரை கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, வினோத்குமார் இந்த மூன்று பேரிடம் நட்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு அவர்களது நட்பை துண்டித்துள்ளார்.

இருப்பினும், தொடர்ச்சியாக மூன்று பேரும் மீண்டும் தங்களுடன் சேருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர்களுடன் செல்லாமல் போளிவாக்கத்தில் உள்ள தொழிற்சாலையில் வினோத்குமார் வேலைக்குச் சென்று வந்துள்ளார். ஆனால் மணல் திருட்டு சம்பந்தமாக போலீசுக்கு தகவல் தெரிவிப்பதாக வினோத்குமாரை மணி, விக்கி, சந்தோஷ் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கியுள்ளனர்.

மேலும் கடந்த 19ம் தேதி காலை வீட்டிற்கு வந்த இவர்கள் 3 பேரும் வினோத்குமாரின் மனைவி ஏஞ்சலிடம் ஜாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏஞ்சல் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்தநிலையில், தனது கணவரை அந்த கும்பல் மிரட்டுவதால் அவர்களால் தனது கணவர் வினோத்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மீண்டும் திருவள்ளூர் எஸ்.பி அலுவலகத்தில் ஏஞ்சல் புகார் கொடுத்துள்ளார்.

The post மணல் திருட்டை காட்டி கொடுப்பதாக வாலிபருக்கு கொலை மிரட்டல்: எஸ்பியிடம் மனைவி புகார் appeared first on Dinakaran.

Read Entire Article