மணமேல்குடியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி

4 months ago 13

 

அறந்தாங்கி, ஜன. 7: மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றிய அளவிலான மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்தாளர்களாக கண்ணன் முத்துக்குமார் இசக்கியப்பன் ராதா மற்றும் ஜெபமலர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

The post மணமேல்குடியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article