மணப்பாறை அருகே காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு

3 months ago 24

 

மணப்பாறை, அக். 5: மணப்பாறை அருகே காணாமல்போன இளைஞர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த எப்.தொப்பம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் மகன் சரவணன்(20). இவர், கோவையில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தவர் திடீரென காணாமல் போயுள்ளார்.

இவரை, உறவினர்கள் தேடி வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட கினற்றில் நேற்று காலை சடலமாக மிதந்துள்ளார். தகவலறிந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் மற்றும் மணப்பாறை தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்விற்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மணப்பாறை அருகே காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article