மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: காவல் துறை அனுமதி வழங்காததால் தவெக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு

5 hours ago 4

சென்னை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்​டு, தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில், இன்று நடை​பெற இருந்த ஆர்ப்​பாட்​டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஆனந்த் அறி​வித்​துள்​ளார்.

சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்​டும், தமிழக அரசை கண்​டித்​தும், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் இன்று (3-ம் தேதி) காலை 10 மணிக்கு எழும்​பூர், ராஜரத்​தினம் மைதானம் அரு​கில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் நாள் மற்​றும் இடம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் தெரி​வித்​துள்​ளார்.

Read Entire Article