மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மற்றும் மேல் பஜார் பகுதியில் ஏராளமான கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பழங்கள்,பொரிகடலை,பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தின்பண்டங்களை குரங்குகள் எடுத்து செல்வதுடன் பொருட்களை தரையில் தள்ளி நாசம் செய்து வருகின்றன.
தொல்லை கொடுக்கும் குரங்குகளை விரட்ட முற்பட்டால் அவைகள் ஆக்ரோஷத்துடன் திருப்பி தாக்க முற்படுகின்றன.மஞ்சூர் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதிருப்தி அடைந்துள்ள வியாபாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து தொலைதுார வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மஞ்சூர் கடை வீதியில் குரங்குகள் அட்டகாசம் வியாபாரிகள் அதிருப்தி appeared first on Dinakaran.