'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகரின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

3 months ago 25

திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'வைரஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் பெரும் வரவேற்பு பெற்ற படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநாத் பாசி.

இவர் சமீபத்தில் கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற விவகாரத்தில் சிக்கினார். அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், தற்போது மற்றொரு வழக்கிலும் சிக்கியுள்ளார்.

அதாவது, எர்ணாகுளத்தில் காரில் சென்றபோது, அவரது கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது பஹீம் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் நடிகர் ஸ்ரீநாத் பாசி சம்பவ இடத்தில் தனது காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இதுகுறித்து எர்ணாகுளம் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கில் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டார். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அலுவலர் தற்காலிகரத்து செய்தார். இதனால், ஒரு மாதத்திற்கு வாகனங்களை இயக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் மட்டாஞ்சேரி பகுதியில் காரில் சென்ற மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாஸி பைக்கில் சென்றவரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக எழுந்த புகாரால் அவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து #LicenseBanned #ManjummelBoys #SreenathBasi #Actor #Bike #Car pic.twitter.com/Gk0wzyoXBf

— Thanthi TV (@ThanthiTV) October 17, 2024
Read Entire Article