மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

1 week ago 6

புதுடெல்லி,

கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும்கட்சியினர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பின் விவரங்கள் பின்வருமாறு:-

கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை. கவர்னருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரம் இல்லை. பொதுவான விதியின் படி, மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே கவர்னர் செயல்பட முடியும். தமிழக சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். அதை ஜனாதிபதிக்கு அனுப்பியதும் செல்லாது

சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான கவர்னரின் செயல்பாடு ஏற்புடையதல்ல. ஒப்புதல் வழங்குவது, ஒப்புதலை நிறுத்திவைப்பது உள்ளிட்ட பிரிவுகளை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு கவர்னரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. அரசமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படிதான் கவர்னர் செயல்பட வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து கவர்னர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். ஒரு வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article