மசினகுடி-முதுமலை சாலையோரத்தில் மரத்தில் சாய்ந்தபடி நின்ற கரடியால் பரபரப்பு

6 hours ago 2


ஊட்டி: மசினகுடி-முதுமலை சாலையோரத்தில் மரத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து முதுமலை செல்லும் சாலையில், மசினகுடி – முதுமலை இடையே உள்ள சாலையோரத்தில் நேற்று மாலை ஒரு கரடி மரத்தில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தது. மேலும், அது மரத்தில் தனது உடலை தேய்த்துக்கொண்டும், அங்கும் இங்கும் உலா வந்து கொண்டிருந்தது. சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் அவ்வழியாக சென்று கொண்டிருந்த போதிலும் அதனை கணக்கில் கொள்ளாமல் கரடி நீண்ட நேரம் அந்த மரத்தில் தனது உடலை தேய்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது.

இதனை அவ்வழியாகச் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இது போன்ற, வனவிலங்குகள் சாலையோரங்களில் நிற்கும்போதோ அல்லது கடக்கும்போதோ அதனை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க வேண்டாம், அதன் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post மசினகுடி-முதுமலை சாலையோரத்தில் மரத்தில் சாய்ந்தபடி நின்ற கரடியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article