உல்லாசத்துக்கு பெண்களை அனுப்புவதாக கூறி ரூ.1.20 லட்சம் பெற்று ஏமாற்றிய பாலியல் புரோக்கர் கடத்தல்: தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

3 hours ago 1

சென்னை, ஜூலை 10: உல்லாசத்துக்கு இளம்ெபண்களை அனுப்புவதாக கூறி ரூ.1.20 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய பாலியல் புரோக்கர் மற்றும் அவரை கடத்திய தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே மூன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் வாலிபரை கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து ரூ.1.20 லட்சம் பணத்தை திரும்பித் தரும்படி மிரட்டினர். அப்போது பாதிக்கப்பட்ட வாலிபர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, தன்னுடைய தந்தையிடம் பெற்றுத் தருவதாக கூறி தனது தந்தையிடம் பேசினார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாலிபரின் தந்தை கட்டுப்பாட்டு அறைக்கு தனது மகன் கடத்தப்பட்டுள்ளதாகவும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் உதவி கமிஷனர் செல்போன் சிக்னல் உதவியுடன் எழும்பூர் ரயில் நிலையம் அருகே கடத்தப்பட்ட வாலிபர் மற்றும் கடத்திய மூன்று மாணவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சட்டக் கல்லூரி மாணவர்கள் உல்லாசத்துக்கு மூன்று இளம்பெண்களை பாலியல் புரோக்கர் மூலம் புக் ெசய்தனர். ஒரு இரவிற்கு பெண்ணுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் மூன்று பேருக்கும் ரூ.1.20 லட்சம் பணத்தை பாலியல் புரோக்கர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினர். ஆனால் ெசான்னபடி பாலியல் புரோக்கர் மூன்று இளம் பெண்களை அனுப்பவில்லை. பின்னர் புரோக்கரை தொடர்பு கொண்டு பணம் கேட்ட போது தரமறுத்து விட்டனர். கூகுள்பே மூலம் பணம் அனுப்பியதால் சம்பந்தப்பட்ட நம்பரை தொடர்பு கொண்டனர்.

அப்போது முகமது ரபீக் என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.1.20 லட்சம் அனுப்பியதை சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டு பிடித்தனர். அதன்பிறகு ரபீக்கிடம் தங்களுக்கு இளம்பெண்கள் தேவை பணத்தை கையில் ெகாடுத்து விடுகிறோம் என வேறு நம்பரில் இருந்து தொடர்பு கொண்டு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரவழைத்து அவரை பிடித்தனர். பிறகு முகமது ரபீக்கை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்று தங்களுக்கு தர வேண்டிய ரூ.1.20 லட்சத்தை தரும்படி கூறி அவரை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கடத்தப்பட்ட முகமது ரபீக் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது சட்டக் கல்லூரி மாணவர்கள் இவரது வங்கி கணக்கிற்கு ரூ.1.20 லட்சம் அனுப்பியது உறுதியானது. அவரது செல்போனை ஆய்வு ெசய்த போது 100க்கும் மேற்ப்பட்ட இளம்பெண்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் முகமது ரபீக் பாலியல் புரோக்கர்களுடன் இணைந்து ஹைக்டெக் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து முகமது ரபீக்கை போலீசார் கைது செய்தனர். அவரை கடத்தி தாக்கியதாக தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட முகமது ரபீக்கிற்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளதா என்றும், அவரிடம் இருந்து பணம் பெற்ற கூட்டாளிகளையும் போலீசார் தேடிவருகின்றனர்.

The post உல்லாசத்துக்கு பெண்களை அனுப்புவதாக கூறி ரூ.1.20 லட்சம் பெற்று ஏமாற்றிய பாலியல் புரோக்கர் கடத்தல்: தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article