மக்கள் விரோத கொள்கைகளையே அமலாக்கும் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு

2 hours ago 2

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6ம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான வரவேற்பு குழு அலுவலகம் மற்றும் மாநாட்டு லோகோ வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடந்தது.

இதில் மாநிலச் செயலாளர் சண்முகம் பேசுகையில்,
‘‘வழிபாட்டுத் தலங்களை மட்டுமல்ல. மக்களின் மத நம்பிக்கையையும் பாஜ – ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த பார்க்கின்றன. மோடி மூன்றாம் முறையாக பிரதமராக பொறுப்பேற்றது துரதிருஷ்டம். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமராக உள்ள அவர், விவசாயிகள், தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளையே அமலாக்கி வருகிறார். அவரை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றவேண்டும். அதற்கான போராட்டத்தை தொய்வின்றி நடத்தவேண்டும்’’ என்றார்.

The post மக்கள் விரோத கொள்கைகளையே அமலாக்கும் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article