மக்கள் மன்றமாக செயல்பட வேண்டும் உச்ச நீதிமன்றம் எதிர்க்கட்சியல்ல: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

4 weeks ago 4

பனாஜி: உச்ச நீதிமன்றம் எதிர்க்கட்சியல்ல. அது மக்கள் நீதிமன்றம். அங்கு இழிவான பேச்சுகளுக்கு இடமில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். கோவா மாநிலம் பனாஜியில் நேற்று நடந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார். அப்போது பேசிய டி.ஒய்.சந்திரசூட், “கடந்த 75 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதிப்பாதையில் இருந்து நாம் விலகி செல்ல கூடாது.

மக்கள் நீதிமன்றமாக இருப்பதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று சொல்ல முடியாது. நீதிமன்ற அறைகளுக்குள் நாம் பயன்படுத்தும் மொழி நமது நெறிமுறைகளை பிரதிபலிக்க வேண்டும். நம் பயன்படுத்தும் மொழி துல்லியமாகவும், அதேசமயம் மரியாதையை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிரான இழிவான மொழிகளுக்கு இடமில்லை” என்று பேசி னார்.

The post மக்கள் மன்றமாக செயல்பட வேண்டும் உச்ச நீதிமன்றம் எதிர்க்கட்சியல்ல: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article