உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை காசிமாவுக்கு துணை முதல்வர் வாழ்த்து

6 months ago 23

சென்னை: உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை காசிமாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிய்வத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் – பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்” என தெரிவித்துள்ளார்.

The post உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை காசிமாவுக்கு துணை முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article