சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை ஆற்றினை, பாலாற்றுடன் செய்யாறு வழியாக இணைக்கவும் மற்றும் நந்தன் கால்வாய்க்கு பாசன வசதியை உறுதி செய்யவும், இணைப்புக் கால்வாய் வெட்டும் திட்டத்தினை மேற்கொள்ள ரூ.320 கோடி தேவைப்படும் என்ற நிலையில், தற்போதைய ஆட்சியில் இந்த திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
அதேபோல், பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காக பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், அரசு அதில் கவனம் செலுத்தவில்லை. உள்நாட்டு நதிநீர் இணைப்புத் திட்டங்களை, வருகின்ற 10 ஆண்டுகளில் செயல்படுத்தாவிட்டால், தமிழகத்தில் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படும். எனவே, போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான நிதியினை முழுமையாக ஒதுக்கீடு செய்ய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மக்கள் நல திட்டங்களை மேற்கொள்ள தேவையான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.