“மக்கள் தொகை அதிகமுள்ள எழும்பூர் தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதில்

4 hours ago 5

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் அலுவல் நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அவை பின்வருமாறு..

அமைச்சர் துரைமுருகன் : உத்திரமேரூர் தொகுதி வெண்குடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நிதி நிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளப்படும் என சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். மேலும் அவர், “பாலற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்துள்ளது. முன்னூரிமை அடிப்படையில் இந்த திட்டம் எடுத்துக் கொள்ளப்படும்,” என்றார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் : சென்னையில் மக்கள் தொகை அதிகமுள்ள எழும்பூர் தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் தெரிவித்தார். மேலும், “திருச்செங்கோடு தொகுதி – மல்ல சமுத்திரத்தை புதிய வட்டமாக உருவாக்க சாத்தியக்கூறு இல்லை. மல்ல சமுத்திரத்தை புதிய வட்டமாக உருவாக்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். திருச்செங்கோடு மலையடிவாரத்தில் 60 ஆண்டுகளாக வசித்து ឈប់ 2,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் கூறினார்.

அமைச்சர் சிவசங்கர் : “3,000 புதிய பேருந்துகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. புதிய பேருந்து வந்த பிறகு வழித்தடங்கள் நீடிக்கப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி போக்குவரத்து பணிமனை அமைக்க திட்டக் கூறுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிலஉரிமை வந்தபிறகு கட்டுமான பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி : “திருவண்ணாமலையில் 20 புதிய துணை மின் இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலசப்பாக்கம் தொகுதியில் 2 துணை மின் நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. கீழ்பென்னாத்தூரில் 4 புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.” என சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி :”தமிழ்நாட்டில் தற்போது 15 அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன. அரசு சட்டக்கல்லூரிகளில் போதுமான அளவிற்கு மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மடத்துக்குளத்தில் சட்டக்கல்லூரி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post “மக்கள் தொகை அதிகமுள்ள எழும்பூர் தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article