சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 23-ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-5° செல்சியஸ் குறைந்துள்ளது.