*ஆர்டிஓ உத்தரவு
ஆரணி : ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று ஆர்டிஓ சிவா தலைமையில் நடந்தது. இதில், வருவாய் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, ஆர்டிஓ சிவா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, வருவாய் கோட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
தொடர்ந்து, கூட்டத்தில், கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, பட்டா ரத்து, நில அளவை, தானசெட்டில் மெண்ட் ரத்து, புகார் மனு, அனாதீன தடை, யூடிஆர் திருத்தம், தார்சாலை அமைத்துதர, இலவச வீடு, சந்தேக மரணம், டேங்க் ஆபரேட்டர் நிலுவை தொகை வழங்ககோரி என 58 கோரிக்கை மனுக்களை ஆர்டிஓ சிவா பெற்று விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில், பிற துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கடந்த வாரம் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என அதிகாரிகளிடம் ஆர்டிஓ ஆய்வு மேற்கொண்டார். இதில் தீர்வு காணப்பட்ட மனுக்கள், நிராகரித்த மனுக்கள், அவற்றை நிராகரித்ததற்கான காரணம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். அதிகாரிகளும் இதுதொடர்பாக ஆர்டிஓவிற்கு விளக்கமளித்தனர்.
The post மக்கள் குறைதீர்வு கூட்டம் 58 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.