மதுரை, ஏப்.2: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த முகாமில் சொத்து வரி திருத்தம் தொடர்பாக 12 மனுக்களும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை தொடர்பாக 18 மனுக்களும், இதர கோரிக்கைகள் வேண்டி 8 மனுக்களும் என மொத்தம் 38 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது.
இம்முகாமில் மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையாளர் கோபு, செயற்பொறியாளர் மாலதி, செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் காமராஜ், நிர்வாக அலுவலர் சிவகுமார், கண்காணிப்பாளர் நம்பிராஜன், உதவிப் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர் முகாமில் 38 கோரிக்கை மனுக்கள் appeared first on Dinakaran.