மக்கள் குறைதீர் கூட்டம்

3 months ago 21

 

சிவகங்கை, அக்.8: சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 365மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷாஅஜித் அறிவுறுத்தினார்.

இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article