மக்கள் குறைதீர் கூட்டத்தில் 377 மனுக்கள் குவிந்தது

2 weeks ago 3

 

தர்மபுரி, நவ.5: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 377 கோரிக்கை மனுக்கள் குவிந்தன. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகைகள் கேட்டும் மொத்தம் 377 மனுக்கள் அளித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லலிதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 377 மனுக்கள் குவிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article